157 உயிர்கள் பலியானதற்கு இதுதான் தான் முக்கிய காரணமா? விமானத்தில் கடைசியாக கேட்ட குரல்: வெளியான முக்கிய தகவல்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ்-8 ஜெட் விமானம் சமீபத்தில் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிழந்துள்ளதையடுத்து நடைபெற்ற விசாரணையில் ரேடார் இடம்பெற்றிருந்த தகவல் மற்றும் விபத்துக்குள்ளான காரணம் தெரியவந்துள்ளது.

விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் சராசரியாக மணிக்கு 370 முதல் 463 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.

ஆனால், விபத்து நடந்தபோது டேக் ஆப் ஆன சில விநாடிகளில் மணிக்கு 740 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் விமானம் பறந்துள்ளது.

போயிங் ஜெட் ரக விமானங்கள் விண்ணில் உயரக்கிளம்பி பறக்கும்போதும், மிருதுவாக தரையிறங்கும்போதும் வால் பகுதியில் உள்ள ‘ஸ்டேபிலைசர்ஸ்’ என்னும் சமநிலைப்படுத்தும் கருவிகள்தான் ஒரு விமானத்தின் மூக்குப்பகுதியை தாழ்த்தவும், உயர்த்தவும் உந்துசக்தியாக செயல்படுகின்றன.

இந்த ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவியில் இருந்து வெளியேறும் அதிர்வலைகள் விமானத்தின் மூக்குப்பதியை உயர எழுப்பவும், தாழ்வாக கொண்டு வரும் பணியை மேற்கொள்கிறது.

ஆனால், ஸ்டேபிலைசர்ஸ்’ கருவியின் தவறான செயல்பாட்டால் எத்தியோப்பியா விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என போக்குவரத்து வல்லுநர்களும், பொறியாளர்களும் சோதனையில் தெரிவித்துள்ளனர்.

புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள்ளாகவே விமானி பிரேக்-பிரேக் என அச்சம் கலந்த குரலுடன் கூறியதையடுத்து, இடதுபுறம் திருப்பினால் நகர்ப்பகுதி இருப்பதால் வலது புறமாக திருப்பி விமான நிலையத்துக்கே வருமாறு வான்போக்குவரத்து அனுமதி அளித்தது.

அடுத்த சில நொடிகளில் விமானம் பறப்பதைக் குறிக்கும் வகையில் ரேடாரில் மின்னும் புள்ளி மாயமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்