பெண்களின் அந்தரங்க வீடியோக்களை பெண் வேடமிட்டு படம்பிடித்த இளைஞர்: அதிரவைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தாய்வான் நாட்டில் பெண்கள் விடுதிக்குள் பெண் வேடமிட்டு சென்று, கல்லூரி பெண்கள் குளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாக படம் பிடித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர் எடுத்த அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதா எனவும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

ஐடி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை செய்யும் சென் எனும் 24 வயது இளைஞர், பெண்கள் அணியும் ஸ்கெர்ட் உடை, விக், கன்ணாடி மற்றும் ஃபேஸ் மாஸ்க் அணிந்து கொண்டு தாய்பெய் நகரத்தில் உள்ள தாம்காங் பல்கலைக் கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் அவ்வப்போது தங்கி வந்துள்ளான்.

மேலும் பெண்கள் குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் அவர்களின் மத்தியில் அடிக்கடி சென்று வந்துள்ளான்.

சென்னின் வித்தியாசமான செயலால் மாணவிகள் சிலருக்கு சந்தேகம் எழுந்தது. பின்னர் அவனை மடக்கி சோதனை செய்ததில் அவன் ஆண் என தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பெண்கள் உடனடியாக பொலிசாருக்குகு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார் சென்-ஐ கைது செய்ததுடன் அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் அவனிடம் இருந்த ரகசிய கமெராவையும் மெமரி கார்டையும் பறிமுதல் செய்தனர். அதில் பல பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதா எனவும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னின் இந்த கீழ்த்தரமான செயலை அறிந்த அவனது தந்தை காவல் நிலையத்திலேயே வைத்து தனது மகனை வெளுத்து வாங்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி அறிந்த பெண்களின் குடும்பம், பல்கலைக் கழக விடுதிக்குள் வெளி நபர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள் என்றும் இதனால், தங்களது மகள்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...