காட்டுப்பகுதியில் பூச்சிக்கடியுடன் கதறிக்கொண்டிருந்த பிஞ்சுக்குழந்தை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியிருந்த பிஞ்சுக்குழந்தை, காட்டுப்பகுதியில் இருந்து பூச்சிக்கடியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் Olango தீவில் உள்ள காட்டுப்பகுதியில் பிஞ்சுக்குழந்தை ஒன்று நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்துள்ளது. அப்பகுதி வழியாக சென்ற பெண் ஒருவர், குழந்தை அழும் சத்தம் கேட்டு தேட ஆரம்பித்துள்ளார்.

அப்போது 35டிகிரி வெயிலில் ஆடை எதுவும் இல்லாமல் முகம் கருகிய நிலையில் கிடந்த குழந்தையை கண்டறிந்துள்ளார்.

முட்புதருக்குள் பூச்சி கடியுடனே அந்த குழந்தை கதறி அழுதுகொண்டிருந்துள்ளது. அருகிலுள்ள தேவாலயம் அருகே தங்கியிருந்த பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு வேகமாக உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

உடனே இந்த தகவல் பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது குழந்தை மருத்துவமனையின் கவனிப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு சென்ற குழந்தையின் தாயையும் தீவிரமாக தேடி வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers