அணிந்திருந்த பர்தாவை கழற்றி எரித்த பெண்: வெளியான வீடியோவின் பின்னணி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஐ.எஸ் தீவிரவாதிகளால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் தனது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தும் விதமாக தனக்கு அணிவிக்கப்பட்டிருந்த பர்தாவைக் கழற்றி தீயிட்டு கொளுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள், யாஸிடி இனத்தவர் வசிக்கும் கிராமங்களில் நுழைந்து அவர்களை பிடித்துக் கொள்வதுண்டு.

குழந்தைகள் இஸ்லாமிய பெற்றோருக்கு விற்கப்பட்டு, இஸ்லாமியர்களாக வளர்க்கப்படுவார்கள்.

பெரும்பாலான ஆண்கள் கொல்லப்பட, வாலிபர்கள் வேலை செய்வதற்காக அடிமைகளாக விற்கப்படுவார்கள்.

இளம்பெண்களும், பெண்களும் பாலியல் அடிமைகளாக்கபடுவார்கள். சுமார் 6,500 பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக ஆக்கப்பட்டதாக தெரிகிறது.

பேய்களை வணங்குபவர்கள் என்று கூறி, யாஸிடி இனத்தவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் இப்படி தண்டிப்பதுண்டு.

அப்படி பிடித்துக் கொண்டு போகப்பட்டு, பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்களில் சிலர் தப்பினார்கள். அவர்களில் ஒருவர்தான் Israa (20).

தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட உடன், Israaவும் மற்ற இளம்பெண்களும் முதலில் செய்த காரியம், தீவிரவாதிகள் தங்களைக் கட்டாயப்படுத்தி அணியச் செய்த பர்தாக்களை கழற்றி எரித்ததுதான்.

சமூக ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், தன்னைக் கட்டாயப்படுத்தி பர்தா அணியச் செய்ததாக தெரிவிக்கிறார் Israa.

தனது பர்தாவைக் கழற்றி எரித்த Israa, இதேபோல் தீவிரவாதிகளும் எரிவதைக் காண ஆசைப்படுகிறேன் என்றார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers