திடீரென சரிந்துவிழுந்த 3 மாடி பள்ளி கட்டிடம்: ஏராளமான மாணவர்கள் இறந்திருக்கலாம் என அச்சம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் 3 மாடி பள்ளிக்கட்டிடம் திடீரென சரிந்து விழுந்ததில் உள்ளிருந்த ஏராளமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவின் லாகோஸ் தீவில் இடாபாஜி நகரில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) கட்டிடம் திடீரென சரிந்து விழுந்துள்ளது.

கட்டிடத்தில் உள்ளே 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் அறிந்து, மீட்பு படையினரும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்துள்ளன.

குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் சிதைந்த கட்டிடத்திற்கு வெளியே நின்று அழுதுகொண்டிருக்கின்றனர்.

நேரில் பார்த்த சாட்சி ஒருவர், முதற்கட்டமாக ஏழு குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் உயிருடன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லாகோஸ் மாநில அவசரநிலை முகாமைத்துவ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கெஹின்டே அடபேயோ, இந்த சம்பவத்தினை உறுதி செய்துள்ளார்.

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டில், தென்கிழக்கு நைஜீரியாவில் ஒரு தேவாலயம் இடிந்துவிழுந்த போது 100 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers