சாகஸ நிகழ்ச்சியின்போது விழுந்து நொறுங்கிய விமானம்: 2 விமானிகளும் பலியான பரிதாபம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

குவாதிமாலா நாட்டில் விமான சாகஸ நிகழ்ச்சி ஒன்றின்போது விமானம் ஒன்று எதிர்பாராமல் விழுந்து நொறுங்கியதில் அதை இயக்கிய விமானியும், சக விமானியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குவாதிமாலா நாட்டின் Escuintlaநகரில், நேற்று விமான சாகஸ நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதைக் கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர், அந்த விமானத்தை ஓட்டிய Eduardo Ibargüen (54) என்பவரை நொறுங்கிக் கிடந்த விமானத்திற்குள்ளிருந்து வெளியே இழுத்தெடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மதியம் 2.19 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருடன் சக விமானியாக பணியாற்றிய Pablo Guillén (55) என்பவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers