பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்: அமெரிக்காவுக்கு உறுதியளித்த பாகிஸ்தான்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்க பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய துணை ராணுவப்படையினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தி கொல்லப்பட்ட விவகாரத்தால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் பால்டன், இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலேயையும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷியையும் அழைத்து பேசினார்.

அப்போது, பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கடுமையான, அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜான் பால்டன் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்க பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் பால்டனிடம் உறுதியளித்தார்.

இந்நிலையில், இந்த தகவலை ஜான் பால்டன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, புல்வாமா தாக்குதல் குறித்தும், பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பே, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய்கோகலே இருவரும் சந்தித்து ஆலோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers