பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில 'மிஸ் டீன் யுனிவர்ஸ்' அழகிக்கு நடந்த சோகம்! கடைசி புகைப்படத்தை வெளியிட்ட தாய்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

2017ம் ஆண்டிற்கான 'மிஸ் டீன் யுனிவர்ஸ்' பட்டம் வென்ற நெதர்லாந்து அழகி, பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முன்தினம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பரிதாபமாக இறந்துள்ளார்.

கிழக்கு நெதர்லாந்தைச் சேர்ந்த லோட்டே வான் டெர் ஜீ (20) என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் டீன் யுனிவர்ஸ்' அழகி பட்டம் வென்று சாதனை படைத்தார். அதன்மூலம் தன்னுடைய மொடலிங் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக குடும்பத்துடன் தன்னுடைய 20-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஆஸ்திரியா சென்றுள்ளார்.

அங்கு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று திரும்பிய லோட்டே திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக ஜேர்மனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால் துரதிஷ்டவசமாக கோமா நிலைக்கு சென்றுவிட்டார். இரண்டு வாரங்கள் கோமாவில் இருந்த லோட்டே, மாரடைப்பால் 6-ம் திகதி இறந்துவிட்டதாக அவருடைய தாய், மகளுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய மகள் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இது என குறிப்பிட்டுள்ள அவர், தங்களுக்கு ஆறுதலான செய்திகளை கூறிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்