வடகொரியாவுக்கு அடுத்த பேரிடி: பத்தாண்டுகளில் இல்லாத நெருக்கடி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வடகொரியா, தற்போது உணவுத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆய்வுகளின்படி, வடகொரியா கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான அறுவடையை இந்தமுறை பதிவு செய்துள்ளது.

இது, ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வடகொரியாவின் உணவு இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்யும் என ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் மேற்கொண்ட இரண்டாவது சந்திப்பில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில்,

தற்போது உணவுத் தட்டுப்பாடும் வடகொரிய நிர்வாகத்தை சிக்கலில் தள்ளியுள்ளது.

மொத்தமாக 1.4 மில்லியன் டன் உணவுப்பண்டங்களின் இழப்பு வடகொரியாவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறும் ஐ.நா,

கடும் வெப்பம், பெருவெள்ளம், வறட்சி மற்றும் அமெரிக்காவின் உந்துதலால் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொருளாதார தடை உள்ளிட்டவைகளே வடகொரியாவின் பஞ்சத்திற்கு காரணம் என ஐ.நாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தபன் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers