பயங்கரவாதி ஹபீஸ் சயித் மீதான விசாரணை.. ஐ.நா அதிகாரிகளுக்கு விசா தர பாகிஸ்தான் மறுப்பு!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி ஹபீஸ் சயித்தை விசாரிக்க செல்லும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி, பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர்.

மும்பை நகரின் முக்கிய இடங்களான ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்டவற்றில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, பிடிபட்ட பயங்கரவாதி கசாப்புக்கு தூக்குதண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயித் என்ற பயங்கரவாதி என தெரிய வந்ததைத் தொடர்ந்து, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அவனது பெயரை ஐ.நா சேர்த்துள்ளது.

இந்நிலையில், அவனை விசாரிக்க ஐ.நா அதிகாரிகள் முடிவெடித்தனர். இதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசாவுக்காக ஐ.நா அதிகாரிகள் விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்