உலகளவில் மாசடைந்த நகரங்களின் பட்டியல்: இந்த நாட்டில் மட்டும் 7 நகரங்களா?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

உலகளவில் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் குர்கான் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 3000 நகரங்களில் IQAir AirVisual 2018 என்ற அமைப்பு ஆய்வொன்றை நடத்தியது, இதில் 64 சதவிகித நகரங்களில் காற்று மாசு அபாய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது டாப் 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் குர்கான் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

இது தவிர காசியாபாத், பரிதாபாத், பிவாடி, நொய்டா, பாட்னா மற்றும் லக்னோ நகரங்களும் இடம்பிடித்துள்ளன.

இந்தியாவின் ஏழு நகரங்களை தவிர சீனாவின் ஹோடான் நகரமும், பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களும் இடம்பிடித்துள்ளன.

இந்நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சுவாச கோளாறுகள் உட்பட பல நோய்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாகவும் ஆய்வு நடத்திய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்