திருமணத்திற்கு முன்பாக ஒன்றாக தங்கியிருந்த ஜோடிக்கு பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட தண்டனை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

திருமணத்திற்கு முன்பாக தனியாக தங்கியிருந்த காதல் ஜோடிக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா நாட்டை பொறுத்தவரை திருமணத்திற்கு முன்னர் ஆண் பெண் ஒன்றாக சேர்ந்து வெளியில் சுற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அப்படி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்படும்.

சுமத்ரா தீவில் பந்தா ஏக் என்ற இடத்தில் பொலிசார் நடத்திய சோதனையின் போது திருமணமாகாமல் 6 ஜோடிகள் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்