நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை: ஒரே பதிலால் அனைவரையும் நெகிழ வைத்த இம்ரான் கான்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வரும் வேளையில், அதற்கு நான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த 27-ம் திகதி பாகிஸ்தான் போர் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானப்படை விமான ஒட்டி அபிநந்தன் அந்நாட்டு எல்லையில் சிக்கிக்கொண்டார்.

அவரை கைது செய்ய பாகிஸ்தான் ராணுவம் சிகிச்சை அளித்து 70 மணி நேரத்திற்கு பின்னர் விடுதலை செய்தது. போர் பதற்றத்தை குறைத்து இந்தியாவிற்கு பாகிஸ்தான் கொடுக்கும் அமைதிக்கான பரிசு அபிநந்தன் என இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இந்த செயலை பல நாட்டை சேர்ந்த தலைவர்களும் பாராட்டியதோடு, தன்னார்வலர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில், இம்ரான் கானிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர்.

அன்றைய தினம் முழுவதும் #NobelPeaceForImranKhan என்ற ஹாஸ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றனர்.

அதேசமயம் பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையான தேசிய சபையில், இதனை தீர்மானமாக நிறைவேற்றி தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இம்ரான் கான், "நான் நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவன் கிடையாது. காஷ்மீர் மக்களின் விருப்பப்படி காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பவர் மற்றும் இந்த துணைக் கண்டத்தில் அமைதி மற்றும் மனித மேம்பாட்டுக்கான வழியை அமைத்து கொடுப்பவரே நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவர்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்