பாகிஸ்தானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளரின் உயிருக்கு ஆபத்து: எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எஃப்-16 ரக போர் விமானங்கள் பயன்படுத்திய தகவலை பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் தாஹா சித்திக் வெளியிட்டுள்ளார்.

மிக்- 21 ரக போர் விமானம் கொண்டு அபிநந்தன் பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

எஃப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கியது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இது உள்நாட்டு தீவிரவாதத்தை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், எஃப்-16 ரக போர் விமானத்தை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்ற நிலையில், இந்தியாவை தாக்குவதற்கு எஃப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியது உண்மைதான என அம்பலமாக்கியுள்ளார்.

இந்த பத்திரிகையாளர் தொடர்ந்து பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால்கோட்டில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி முகாமின்மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியது உறுதி என்பதுகுறித்து மசூத் அசாரின் சகோதரர் வெளியிட்ட ஆடியோ க்ளிப்பையும் இவர்தான் வெளியிட்டார்.

இந்நிலையில் இவரின் உயிருக்கு ஆபத்து என்றும், பாகிஸ்தான் நாட்டுடன் நட்புறவுடன் இருக்கும் நாடுகளுக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்