சவுதி பத்திரிகையாளர் ஜமால் உடல் எரிக்கப்பட்டுவிட்டது! வெளியான தகவல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

சவுதி அரசை விமர்சித்து வந்த அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கி நாட்டில் உள்ள சவுதி தூதரகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சவுதி அரேபியாவின் மீது பல நாடுகள் கண்டனங்களை தெரிவித்தன. இந்தக் கொலை தொடர்பாக நடந்த விசாரணையில், சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலை கொலை செய்துள்ளதாக கூறப்பட்டது.

மேலும் இந்த கொலையை துருக்கி அரசு விசாரிக்க, சவுதி அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியது என்று ஐ.நா.சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Getty

இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட ஜமாலின் உடல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இறுதியில் உண்மை கண்டறியப்படும் என்றும் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜமால் கஷோகி உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் எரிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஏ.என்.ஐ வெளியிட்ட செய்தியில்,‘மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் அல்-ஜசிராவின் விசாரணையில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல், துருக்கியில் உள்ள சவுதி தூதரக அதிகாரி வீட்டில் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்