வெளிநாட்டில் இலங்கையர் மற்றும் 6 இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அபுதாபியில் Big Ticket எனப்படும் லாட்டரியில் 6 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையருக்கு கோடிகள் பரிசு கிடைத்துள்ளது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 6 பேரில் இந்தியாவின் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரோகி ஜார்ஜ் என்பவரும் ஒருவராவார்.

அவருக்கு Dh12 மில்லியன் (23 கோடி என்ற அளவில்) பரிசு விழுந்துள்ளது. மற்ற 6 பேரின் பெயர் மற்றும் இன்னபிற விபரங்கள் இன்னும் தெரியவில்லை.

ஜார்ஜ் இது குறித்து கூறுகையில், நான் குவைத்தில் பணிபுரிகிறேன். எனக்கு லாட்டரி நிறுவனத்திடம் இருந்து போன் வந்தது.

எனக்கு பரிசு விழுந்ததாக கூறியதை என்னால் முதலில் நம்பவே முடியவில்லை.

நான் என் குடும்பத்தாருடன் இங்கு 12 ஆண்டுகளாக வசித்து வருகிறேன், என்னுடைய மகள் கிரேட் 10 வகுப்பில் படிக்கிறார்.

இன்னும் ஒன்று அல்லது இரண்டாண்டுகளில் இந்தியாவுக்கு திரும்புவது குறித்து திட்டமிட்டு வருகிறோம்.

லாட்டரியில் விழுந்த பணத்தை வைத்து என்ன செய்வது என உடனடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்