மோமோ இறந்துவிட்டது! குழந்தைகள் இனி பயப்படவேண்டாம்: மோமோவை உருவாக்கியவர் அளித்த நற்செய்தி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மோமோ சாலஞ்ச் என்ற பெயரில் சமீப காலமாக ஒரு பொம்மை செய்த அராஜக செயல்களுக்கு அளவே இல்லை.

அந்த பொம்மையின் மிரட்டலுக்கு அஞ்சி குழந்தைகள் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்லும் அளவுக்கு நிலைமை தீவிரமானது.

சமீபத்தில் ஒரு பள்ளிக் குழந்தை ஒருத்தி தனது தலையை பள்ளிச் சுவரில் மோதிக் கொண்டிருந்ததைக் கண்ட மற்ற சிறுமிகள் ஆசிரியர்களிடம் தெரிவிக்க, விசாரித்ததில், அவள் மோமோவின் கட்டுப்பாட்டில் இருந்ததும், தனியாக கழிவறைக்கு செல்லக் கூட பயந்து நடுங்கிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆம், அது மோமோ இறந்து போய் விட்டது என்ற நல்ல செய்திதான். இதை வேறு யாரும் சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க முடியாது. ஆனால் இதை சொன்னவர், மோமோவை உருவாக்கியவர்.

முட்டைக் கண்களும், மார்பு வரை ஒரு நிர்வாணப் பெண்ணின் உடலும், அதற்குக் கீழ் ஒரு பறவையின் உடலும் கொண்ட மோமோ என்னும் இந்த கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கியவர் Keisuke Aiso (43) என்னும் ஜப்பானியராவார்.

டோக்கியோவைச் சேர்ந்த Keisuke Aiso, மோமோ இறந்து விட்டது, அது அழுகிப் போய் விட்டது என்று கூறியுள்ளார்.

அது இப்போது இல்லை, அது நீண்ட காலம் வாழ்வதற்காக உருவாக்கப்படவும் இல்லை, அது இறந்து அழுகிப் போனது, அதை தூக்கி வீசி விட்டேன் என்று கூறியுள்ளார் அவர்.

மோமோ இறந்து போனது என்று பிள்ளைகளுக்கு சொல்லுங்கள், அவள் இல்லை, அவளால் வந்த சாபமும் போய் விட்டது என்று சொல்லுங்கள் என்கிறார் Keisuke Aiso.

பேய்ப்படங்களில் வரும் உருவம் போன்ற ஒன்றை செய்து மக்களை பயமுறுத்துவதற்காக மட்டுமே மோமோவைச் செய்ததாக தெரிவிக்கும் Keisuke Aiso, மோமோ இறந்து போய் விட்டது, இனி பிள்ளைகள் அதற்கு பயப்பட வேண்டாம் என்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்