தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உயிருடன் உள்ளார்: பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உயிரோடு நலமுடன் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட 45 வீரர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தால் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, கடந்த மாதம், 26ம் திகதி பாகிஸ்தான் நாட்டில் உள்ள பாலக்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக குண்டு வீசின.

இதில் பல தீவிரவாதிகள் கொத்தோடு கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, சமீபத்தில் அளித்த பேட்டியில், மசூத் அசார் தீவிர உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய விமானப்படை தாக்குதலில் சிக்கி மசூத் அசார் உயிரிழந்ததாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

ஆனால், இதனை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மறுத்துள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மசூத் அசார், நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஊடகங்களும் இதையே தெரிவிக்கின்றன. இதனிடையே மசூத் அசார் பலியானதாக வெளியான தகவல் குறித்து இந்திய உளவுத்துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்