இரத்தம் தோய்ந்த முகத்துடன் தன் தங்கையின் உடலுக்கருகே கிடக்கும் சிறுமி: மனதை கலங்க வைக்கும் படத்தின் பின்னணி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கிட்டத்தட்ட தனது குடிமக்களில் பெரும்பாலானோரைக் கொன்று, மற்றவர்களை அகதிகளாக நாடு நாடாக ஓடச் செய்த பின்னரும், தன் சொந்த நாட்டு மக்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார் சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்.

மீண்டும் Khan Sheikhoun நகர் மீது ராணுவம் வான் வழித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு ஓடுவதைக் கண்டதாக, போரை கண்காணிக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெளியாகியுள்ள சில புகைப்படங்கள் கல் மனதையும் கரைத்து கண்ணீர் விடச்செய்யும் விதத்தில் அமைந்துள்ளன.

முக்கியமாக வான் வழித்தாக்குதலில் சேதமடைந்த ஒரு வீட்டில், இடிபாடுகளுக்கிடையே சிக்கி முகமெல்லாம் இரத்தமாக கிடக்கும் ஒரு சிறுமியின் படத்தைச் சொல்லலாம்.

அந்த படத்தை உற்றுப்பார்த்தால் அவளருகே மண்ணில் புதைந்து இறந்து கிடக்கும் அவளது தங்கையில் கைகள் மண்ணுக்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

அவள் முகத்தைப் பார்க்கும்போது எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத அந்த சிறுமி மீண்டும் சாதாரண நிலைக்கு வருவாளா என்பது சந்தேகமே.

இன்னொரு புகைப்படத்தில் தனது மகளை சாகக் கொடுத்த ஒரு தந்தை, முகமெல்லாம் புழுதியுடன், இறந்த தன் மகளின் உடலை மடியில் கிடத்திக் கதறுவதையும், அடுத்த படத்தில், அந்த குழந்தையில் உடலை மீட்புக் குழுவினர் பிணவறைக்கு கொண்டு செல்ல, அவளைப் பிரிய முடியாமல், அவளது கால்களுக்கு முத்தமிட்டு பிரியாவிடை கொடுப்பதையும் காணலாம்.

சொந்த குடிமக்களை குண்டு வீசிக் கொன்றொழித்துவிட்டு, மீதி இருக்கும் எதை ஆளப்போகிறார் என்று தெரியவில்லை சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers