வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்தியருக்கு லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! எவ்வளவு பரிசு தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததால், அவர் அந்த டிக்கெட்டை எடுப்பதற்காக மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக துபாய் லாட்டரி குலுக்கலில் மலையாளிகள் அதிகம் பேர் லாட்டரியில் பரிசு வென்றுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 31 வயதான முகம்மது அஸ்லாம் என்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் லாட்டரியில் விழுந்துள்ளது.

இது இலங்கை மதிப்பில் 17 கோடி அவருக்கு கிடைக்கவுள்ளது. மேலும் இந்த வகை லாட்டரி டிக்கெட்டிற்கு அந்நாட்டி வரி செலுத்த தேவையில்லை.

தற்போது அஸ்லாமிடம் லாட்டரி டிக்கெட் இல்லை. அதை இவர் கேரளாவில் இருக்கும் தன் பெற்றோரிடம் கொடுத்து வைத்துள்ளார்.

இதனால் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதால், அதை எடுப்பதற்காக விரைவில் கேரளாவிற்கு செல்லவுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ஷார்ஜாவில் கடந்த 12-ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். லாட்டரியில் பரிசு விழுந்ததைக் கேட்ட போது என்னாலையே நம்ப முடியவில்லை. லாட்டரி டிக்கெட்டை லாட்டரி டிக்கெட்டை எனது தந்தை பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார். அந்த டிக்கெட்டை எனது பெற்றோர்களிடம் கொடுத்து பிராத்தனை செய்யக்கூறினேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும் லாட்டரியில் விழுந்த பணத்தை வைத்து எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லை எனவும், என்னுடைய குடும்பத்தினரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வந்து சுற்றிக்காட்ட வேண்டும் என்பதே ஆசை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers