வெளிநாட்டில் வேலை தேடி வரும் இலங்கையர்களுக்கு தனி ஆளாக உதவி வரும் இலங்கையர்... யார் அவர்? நெகிழ்ச்சி பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் 40 ஆண்டுகளாக இத்தாலியில் வாழும் நிலையில், அங்கு வேலை தேடி வரும் இலங்கையர்களுக்கு நெகிழ்ச்சியான உதவியை செய்து வருகிறார்.

இலங்கையை சேர்ந்தவர் அலெக்ஸ் வேன் அர்கடி. இவர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார்.

இவர் இத்தாலிக்கு வேலை தேடி வரும் இலங்கையர்கள் மொழி பிரச்சனையால் சிரமப்படுவதை பார்த்த நிலையில் அவர்களுக்கு உதவ முடிவு செய்தார்.

அதன்படி இத்தாலிக்கு வருபவர்களுக்கு இலவசமாக இத்தாலிய மொழியை கற்று தரும் வகுப்பை அலெக்ஸ் ஏற்பாடு செய்து வருகிறார்.

கடந்த 2009லிருந்து ரோம் நகரில் வேலை தேடி வரும் இலங்கையர்கள் மற்றும் வேறு நாட்டு நபர்களுக்கு ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் வகுப்பெடுக்க அலெக்ஸ் உதவி வருகிறார்.

மேலும் Viva I'Italia என்ற பெயரில் இத்தாலிய - சிங்கள மொழி புத்தகத்தையும் முதல்முறையாக அலெக்ஸ் வெளியிட்டுள்ளார்.

50,000 இலங்கையர்கள் வரை இத்தாலிக்கு வேலை தேடி வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உள்ளூர் மொழியில் எளிதாக தங்கள் முதலாளிகளிடம் பேச வேண்டும் என்பதற்காகவே அலெக்ஸ் இந்த விடயத்தை மேற்கொண்டுள்ளார்.

அலெக்ஸ் இந்த உதவிகளை செய்ய Caritas என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் அவருக்கு துணையாக இருந்து வருகிறது.

இத்தாலிக்கு வேலை தேடி வருபவர்கள் பலர் வீட்டு வேலை செய்வது, வயதான மற்றும் ஊனமான நபர்களுக்கு உதவியாக இருப்பது, தோட்ட வேலைகள் செய்வது போன்ற வேலைகளை தற்காலிகமாக செய்வதாக அலெக்ஸ் கூறுகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers