நடுவானில் சென்றுகொண்டிருந்த விமானத்தில் அசந்து உறங்கிய விமானி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நீண்ட நேர வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் சீன விமானிகள் நடத்திய 7 நாள் போராட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது விமானி ஒருவர் விமானத்தில் அசந்து உறங்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சோர்வு மற்றும் நீண்ட நேர பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவை சேர்ந்த விமான ஓட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 100 விமானங்களில் முன்பதிவு செய்த 20,000 பயணிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர்.

இந்த நிலையில் விமான ஒட்டி ஒருவர் பணியில் இருக்கும் போது அசந்து உறங்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து செய்திவெளியிட்டுள்ள சீன ஏர்லைன்ஸ் நிர்வாகம், வீடியோவில் தென்படும் விமான ஒட்டி, டோக்கியோ, ஒகினாவா, சியோல் மற்றும் ஹாங்காங் போன்ற வழித்தடங்களில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்.

விமானப் பாதுகாப்புப் பணிகளை புறக்கணித்த குற்றசாட்டுகளுக்காக, விமானி போதுமான தண்டனையைப் பெற்றிருக்கிறார் என சீன விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் சக விமானி அசந்து உறங்கும்பொழுது அவரை எழுப்பி விடாமல் படம்பிடித்த விமானியின் மீதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers