காதலனை கொலை செய்து சடலத்தை கான்க்ரீட்டால் மூடி வைத்த பெண்: ஈக்கள் கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அர்ஜென்டினாவில் காதலனை கொலை செய்து சடலத்தை அலமாரியில் அடைத்து கான்க்ரீட்டால் மூடிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அர்ஜென்டினாவை சேர்ந்த கில்டா அகோஸ்டா என்கிற 47 வயது பெண் கடந்த புதன்கிழமையன்று பொலிஸ் நிலையத்தில் ஒரு அதிர்ச்சிதரும் தகவலை கூறியுள்ளார்.

அங்கு சென்ற அவர், என்னுடைய காதலன் ரிச்சர்ட் அலெஜண்ட்ரோ (28), கடந்த மூன்று மாதங்களாக 13 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்து டிசம்பர் 19-ம் தேதியன்று சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டேன். பின்னர் அவனுடைய உடலை ஒரு அலமாரியில் வைத்து கான்க்ரீட்டால் அடைத்துவிட்டேன் என கூறி வீட்டின் சாவியையும் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் உடனடியாக வீட்டிற்கு சென்ற பொலிஸார், ரத்தக்கறைகள் மற்றும் ஈக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்களை வரவழைத்து ஆக்சிஜன் உதவியுடன் அலமாரியை திறந்துள்ளனர்.

அதனுள் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், கில்டாவை கைது செய்தனர். இதற்கிடையில் சம்மந்தப்பட்ட சிறுவனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers