நடுக்கடலில் கடத்தல்காரர்களை அலறவிட்ட கடற்படை: சிலிர்க்கவைக்கும் வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோ நாட்டில் கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 630 கிலோ போதைப் பொருள்களை அந்நாட்டு கடற்படை அதிரடியாகப் பறிமுதல்செய்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

மெக்ஸிகோவில் உள்ள சினாலோவா மாகாணத்தில், கடல் வழியாக 1,300 பவுண்டு அளவிலான கொக்கைன் போதைப் பொருள்களைக் கடத்தல்காரர்கள் கடத்திச் செல்வதாக, அந்நாட்டு கடற்படைக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து, கடற்படையினர் பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்களில் சென்று, அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த படகை சுற்றிவளைத்தனர்.

கடத்தல் படகுடன் நான்கு சக்திவாய்ந்த வெளி மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்ததால், அதிவேகமாகச் சென்றது.

ஆனாலும், விடாமல் துரத்திய கடற்படை, ஒருகட்டத்தில் படகை சுற்றிவளைத்தனர். மேலும் ஹெலிகொப்டரிலிருந்து கயிறு கட்டி இறங்கி, படகில் இருந்த கடத்தல்காரர்களைக் கைதுசெய்தனர்.

சினிமா பாணியில் நடந்த இந்த சேஸிங், மெக்ஸிகோ கடற்படைக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது. மேலும், கடற்படையினர் கடத்தல்காரர்களை சுற்றிவளைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்