பேய் விரட்டுவதற்காக மகனை இரவு முழுவதும் நடுக்காட்டில் கட்டிவைத்த வந்த தாய்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பேய் விரட்டுவதற்காக 6 வயது மகனை இரவு முழுவதும் உறைபனியில் நடுக்காட்டில் கட்டிவைத்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த நதேஷ்தா குலிகோவா (33) என்கிற தாய், தன்னுடைய 6 வயது மகன் லெவ்வை இரவு 9 மணிக்கு கடும் உறைபனியில் காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அதிகாலை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர், சிறுவனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த சிறுவன் உதவி செய்யுங்கள் என்ற ஏக்கத்துடன் பார்த்துள்ளான். வேகமாக இறங்கிய அவர், கத்தியால் கயிற்றை அகற்றிவிட்டு சிறுவனை அங்கிருந்து காரில் ஏற்றியுள்ளார்.

அப்போது நடந்தவை குறித்து கூறிய அந்த சிறுவன், என்னை விட எங்கள் வீட்டில் இருக்கும் நாய் மீது தான் அம்மா அதிக பாசம் காட்டுகிறார்.

அதனால் அதனை கொலை செய்ய முயற்சி செய்தேன். ஆனால் என்னுடைய அம்மா என்னை கொலை செய்வதற்காக இங்கு கட்டிவைத்தார் என கூறியிருக்கிறான்.

இதனை கேட்டு திடுக்கிட்ட அந்த வாகன ஒட்டி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் நதேஷ்தாவை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அப்போது வாக்குமூலத்தில், குழந்தையின் நடத்தையில் அதிக பிரச்சனைகள் இருந்ததால் அதனை குணப்படுத்தும் முயற்சியில் முதலில் ஷாமன்ஸ் (சூனிய மருத்துவர்கள்) மற்றும் "மனநோய் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கினை கேட்ட நீதிபதி, நதேஷ்தாவை 48 மணி நேரம் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்