ஆம்..! ஜெய்ஷ் இ முகமதுதான் காரணம்: அவர்கள் என்னையும் கொல்ல பார்த்தார்கள் - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குகாரணம் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்றும்,அவர்கள் என்னையும் கொலை செய்ய திட்டமிட்டனர் என்றும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர்முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ஆம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான்தான் முக்கிய காரணம் என்று இந்திய பிரதமர் மோடிஉள்ளபட தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் மறுப்பு தெரிவித்து அரசு தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தார். அதில்இந்திய அரசு வேண்டும் என்று பழிபோடுவதாக குற்றம் சாட்டினார்.

தற்போது இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர்முஷாரப் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மோடிக்கு இந்திய வீரர்கள் மீது உண்மையான அக்கறை இல்லை என்றும், அவர் நன்றாக நடிக்கிறார் என்றும்தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி தேவையில்லாமல்குற்றஞ்சாட்டி வருகிறார். இந்தியா பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது என்பதேமிகப்பெரிய பொய். இது போன்ற பொய்களை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், புல்வாமா தாக்குதல் மிகவும் வருந்ததக்க விஷயம். அதில் சந்தேகமும் இல்லை. நான் சொல்கிறேன் இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இமுகமது அமைப்பு மீதும், மசூத் அசார் மீதும் கொஞ்சம் கூட கருணை காட்ட கூடாது என்றுதெரிவித்துள்ளார்.

அதே சமயம் இதில் பாகிஸ்தான் மீதும் குற்றஞ்சாட்டுவது தவறு. பாகிஸ்தான் அரசு இதில் தலையிடவில்லை. இந்தியா பாகிஸ்தான் மீது மோசமாக குற்றஞ்சாட்டிவருகிறது. இந்த தாக்குதலை நடத்தியது முழுக்க முழுக்க ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான்.அவர்கள் என்னையும் கொல்ல பார்த்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers