ராணுவத்தின் கைப்பிடியில் இருக்கும் இம்ரான் கான்... புல்வாமா தாக்குதல் குறித்து முன்னாள் மனைவி பகீர் தகவல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவம் ஆட்டுவிக்கும் பொம்மையை போல இருப்பதாகவும், அவர்கள் கூறுவதை போலவே நடந்துகொள்வதாகவும் அவருடைய முன்னாள் மனைவி ரெகம்கான் தகவல் வெளியிட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினார்கள். பலரும் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகம்மது என்கிற பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது.

அதேசமயம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை குற்றம் சுமத்தி வருவதுடன், தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தாக்குதல் நடந்து 5 நாட்கள் இது குறித்து அரசு தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் வாயிலாக பேசியிருக்கும் அவருடைய முன்னாள் மனைவி ரெகம்கான், பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக இம்ரான் கான் செயல்பட்டு வருகிறார். தாக்குல் முடிந்த பிறகு ராணுவத்தின் வழிகாட்டுதல்களுக்காக அவர் காத்திருந்தார். அவர்கள் கொடுத்த அறிக்கையினை தான் அப்படியே வெளியிட்டார். அவரால் சொந்த கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இம்ரான் கான் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி ரெஹ்ம் கானை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அக்டோபர் 30, 2015 அன்று அவர் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers