பாகிஸ்தான் நாட்டுக்கு தங்க துப்பாக்கியை பரிசாக அளித்த சவுதி இளவரசர்: திரும்பிய உலக நாடுகளின் கவனம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கடந்த 17 ஆம் திகதி சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் பாகிஸ்தான் நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தங்க துப்பாக்கியை பரிசாக அந்நாட்டு பிரதமரிடம் வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே 20 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

மேலும் சந்திப்பின்போது, ஏழை தொழிலாளர்களாக சவுதிக்கு சென்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 2,107 பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்து சவுதி இளவரசர் உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் நாட்டுக்கு தனது சிறப்பு பரிசாக தங்க துப்பாக்கியை சவுதி இளவரசர் அளித்துள்ளார்.

Heckler & Koch MP5 என்று துப்பாக்கி ஜேர்மன் பொறியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட இந்த துப்பாக்கியின் புகைப்படத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வரும் இந்த நிலையில். சவுதி இளவரசரின் பாகிஸ்தான் பயணம் அதிக கவனம் பெற்றுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்