நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற பெண்ணை விரட்டிய நாய்கள்! அதன் பின் நடந்த பரிதாப சம்பவத்தின் சிசிடிவி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தனியாக நடந்து வந்த பெண்ணை நாய்கள் விரட்டி கடித்ததால், அவர் பரிதாபமாக இறந்த நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மெக்சிகோவைச் சேர்ந்தவர் Margarita. 34 வயதான இவர் அங்கிருக்கும் டொல் கேட் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் சம்பவ தினத்தன்று இரவு டோல் கேட்டிற்கு செல்வதற்காக தனியாக குறுக்கு வழி பாதை ஒன்றில் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த சுமார் 11-க்கும் மேற்பட்ட நாய்கள் அவரை விரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடியுள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து நாய்கள் விரட்ட, தடுமாறி கீழே விழுந்துள்ளார். விரட்டி வந்த நாய்கள் அவரை கடித்து குதறியதால், அந்த இடத்திலே பரிதாபமாக இறந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவதினத்தன்று அவர் நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடுவது அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்ததால், தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் கடித்த அந்த நாய்கள் வெறிப்பிடித்தவை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்