பிரித்தானியாவிற்கு செல்ல தயாரான மனைவி! கணவனின் மர்ம உறுப்பை அறுத்து வீசிய பயங்கரம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவிற்கு செல்ல தயாரான போது, கணவனின் கள்ளக்காதல் குறித்து மனைவி கேட்டதால், வாக்குவாதம் முற்றி, அவர் கணவனின் மர்ம உறுப்பை வெட்டி வீசியுள்ளார்.

நைஜீரியாவைச் சேர்ந்த தம்பதி Sym(50)-Udeme Otike Odibi(47).

இதில் மனைவியான Udeme Otike Odibi-க்கு பிரித்தானியா மற்றும் நைஜீரியா குடியுரிமை உள்ளது.

இந்நிலையில் Udeme Otike Odibi-யின் கணவர் அவரை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அவர் இது குறித்து கணவரிடம் கேட்ட போது, அவர் சரியான பதில் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் இது குறித்து தொடர்ந்து கேட்டுள்ளார். ஆனா அவர் அளித்த விளக்கம் Udeme Otike Odibi-க்கு திருப்தியாக இல்லை.

இதனால் அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் திகதி பிரித்தானியாவின் Lagos பகுதியில் இருக்கும் தன் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

இதற்காக வீட்டின் பெட் லாக்கர் மற்றும் திருமண சான்றிதழை தேடியுள்ளார். ஆனால் அது கிடைக்கவில்லை. இதனால் இது குறித்து கணவரிடம் கேட்ட போது, மீண்டும் வாக்கும் வாதம் ஆகியுள்ளது.

அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற Udeme Otike Odibi அங்கிருந்த frying pan-ஐ எடுத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

அதன் பின் கிட்சனுக்குள் சென்ற அவர், அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து கத்தியால் குத்தியுள்ளார். அதன் பின் அவரின் மர்ம உறுப்பையும் வெட்டி வீசியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் இருந்த Sym பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.

கணவனை குத்திய பின் Udeme Otike Odibi தன்னுடைய வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு, நான் ஒரு மோசமான சம்பவத்தை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார், அதன் பின் மீண்டும் தன் அம்மாவிற்கு என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா சண்டை நடந்துவிட்டது, முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தையறிந்து விரைந்து வந்த பொலிசார் வீட்டில் இருந்த frying pan, கத்தி, பேனா மற்றும் பிரித்தானியா மற்றும் நைஜீரியா பாஸ்போர்ட்களை கைப்பற்றினர்.

அதன் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள, விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம் வரும் 25-ஆம் திகதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், Sym ஏற்கனவே முதல் திருமணமானவர், அவரை விவாகரத்து செய்து இவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார், Sym-ன் மகள் பிரித்தானியாவில் படித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers