2 குழந்தைகளும் தன் ஜாடையில் இல்லை என 3 ஆண்டுகளாக புலம்பிய கணவன்: இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் சோதனை குழாய் மூலம் இளம்பெண் குழந்தை பெற்ற நிலையில் அவர் கணவர் குழந்தைகளுக்கு தந்தையில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

வடிம் என்ற ஆணும், அன்னா என்ற பெண்ணும் கணவன், மனைவியாவார்கள். இருவருக்கும் இயற்கை முறையில் குழந்தை பிறக்காது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து சோதனைக் குழாய்க் மூலம் குழந்தை பெற முடிவெடுத்தார்கள். அதன்படி வடினின் விந்தணுவை மருத்துவமுறையில் செலுத்தி கடந்த 2014-ல் அன்னா கர்ப்பமானார்.

அந்த ஆண்டே அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆனால் குழந்தைகள் பிறந்தது முதலே இரண்டும் தன்னுடைய ஜாடையில் இல்லை என வடிம் புலம்பி வந்தார்.

இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. பின்னர் அன்னா, டிஎன்ஏ பரிசோதனை செய்த போது வடிம் நினைத்தது போலவே அது அவரின் குழந்தைகள் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து அன்னா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக விடின் கூறினார்.

பின்னர் குறித்த மருத்துவமனையில் சென்று விசாரித்த போது, அன்னா மருத்துவமனையில் பிரசவம் அடைய சேர்ந்த நாளில் வேறு பெண்ணும் சேர்ந்திருந்த நிலையில் அவருக்கு செலுத்த வேண்டிய விந்தணு மாற்றி அன்னாவுக்கு செலுத்தப்பட்டது தெரியவந்தது.

ஆனாலும் இந்த காரணத்தால் சமாதானமடையாத வடின், மனைவி அன்னாவை விவாகரத்து செய்ததோடு, இரட்டை குழந்தைகளுக்கு தான் தந்தை இல்லை என அரசாங்க பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்.

இதோடு குறித்து மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு £4,600 நஷ்டஈடு கொடுக்க உத்தரவிட்டது.

ஆனாலும் தனக்கு £81,000 நஷ்டஈடு வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers