காதலியை ஏமாற்றி இன்னொரு பெண்ணுடன் ரகசிய வாழ்க்கை! வீடியோவைப் பார்த்து கதறி அழுத பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

காதலன் தனக்கு உண்மையாக இருக்கிறானா என்பதை அறிவதற்காக காதலி, ஒரு மொடல் பெண்ணை அனுப்பி சோதித்த போது, அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

பிரபல யூ டியூப் சேனலான Catch A Cheater-ஐ தொடர்பு கொண்ட இளம் பெண் ஒருவர், தன் காதலனின் உண்மை நிலையை அறிய விருப்பப்பட்டுள்ளார்.

இதற்காக அந்த யூடியூப் சேனல் மூலம் மொடல் அழகியை, காதலன் இருக்கும் கடை ஒன்றிற்கு அனுப்பியுள்ளனர்.

அப்போது அந்த மொடல் அழகி, அந்த பெண்ணின் காதலரிடம் பேசியுள்ளார். இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போது அவர் தன் உடல்களை தொடும்படி கூறுகிறார்.

பெண்ணின் காதலனும் தொடுகிறார். அதன் பின் உங்களுக்கு காதலி அல்லது மனைவி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் என்று கூற, இதை நேரலையில் டிவி மூலம் பார்த்துக் கொண்டிருந்த அவரது காதலி நம்மை தான் கூறுகிறார் என்று சந்தோஷப்பட்டார்.

ஆனால் பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களில் அங்கு இன்னொரு பெண் வர, அவர் இவர் தான் காதலி, இரண்டு வருடமாக தெரியும், கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூற, இதைக் கேட்டு காதலி அதிர்ச்சியடைந்து, கண்ணீர் விடுகிறாள்.

இரண்டு வருடம் தனக்கு தெரியாமல், அதுவும் அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று கண்ணீர் விட்டு கதறுகிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்