இலங்கை ராணுவ தாக்குதலில் கண் இழந்த பத்திரிகையாளர் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய செய்தி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக யுத்தம் நடந்தபோது செய்தி சேகரிக்கச் சென்றபோது, வெடி விபத்தொன்றில் சிக்கி, தனது ஒரு கண்ணில் பார்வையை இழந்ததால் கடற்கொள்ளையர்களைப்போல் ஒரு கண்ணை மறைத்து வாழ்ந்து வந்த, உலகப் புகழ் பெற்ற பத்திரிகையாளரான Marie Colvin கொல்லப்பட்டதற்காக நடந்து வந்த வழக்கில், அவரது உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சிரியா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

உண்மையிலேயே Marie Colvin ஒரு உலகப்புகழ் பெற்ற பத்திரிகையாளர்தான். காரணம் அவர் பிறந்தது அமெரிக்காவில், இறுதியாக வேலை பார்த்தது பிரித்தானிய ஊடகத்திற்காக, கண் இழந்தது இலங்கையில், உயிரிழந்தது சிரியாவில்.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து, இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்கு அவர் செல்லும்போது, ராணுவம் ராக்கெட்டால் இயக்கப்படும் வெடிகுண்டு ஒன்றை வீசி தாக்கியதில் Marie Colvin இடது கண் பாதிக்கப்பட்டு கண் பார்வையை இழந்தார்.

இலங்கை உள்நாட்டுபோர் குறித்து செய்தி சேகரிக்கும்போது ’பத்திரிகையாளர், பத்திரிகையாளர்’ என சத்தமிட்ட நிலையிலும் தாக்குதலுக்குள்ளானார் Marie Colvin. தன்னை தாக்கியவர் தெரிந்தே தன்னை தாக்கியதாக பின்னர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார் Marie Colvin.

அப்போது 44 வயதுடையவராக இருந்த Marie Colvin, கடுமையாக காயம்பட்ட நிலையிலும் 3,000 வார்த்தைகள் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதி முடித்தார்.

தமிழ் வழிகாட்டிகள் உதவியுடன் வன்னி காட்டுக்குள் 30 மைல்கள் நடந்து, வடக்கு தமிழ் பிரதேசத்தில் நடந்த யுத்தம் குறித்து செய்தி வெளியிட்ட Marie Colvin, அரசு உணவுப்பொர்ட்களையும், மருந்துகளையும், போர் குறித்து செய்தி சேகரிக்க செல்லும் வெளி நாட்டு பத்திரிகையாளர்களையும் தடை செய்தது உட்பட ஒரு விடயம் தவறாமல் செய்தியாக்கினார்.

Marie Colvin காயமடைந்ததற்குப் பிறகு, இலங்கை அரசு, பத்திரிகையாளர்களை நாங்கள் தடை செய்யவில்லை, ஆனால் ஏற்படவிருக்கும் அபாயங்கள் குறித்து அறிந்திருப்பதோடு, தங்கள் உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவித்தது.

பின்னர், 2012ஆம் ஆண்டு, Marie Colvin பத்திரிகையாளர்கள் நாட்டுக்குள் நுழைவதை அரசு தடுக்க முயற்சிப்பதை அறிந்தும், சிரிய யுத்தம் குறித்து செய்தி சேகரிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னால் அமர்ந்து சிரியாவுக்குள் நுழைந்தார்.

நடத்தப்பட்ட இரக்கமற்ற தாக்குதல்கள் குறித்து இறுதியாக செய்தி ஒன்றைத் தயாரித்திருந்த நிலையில், Colvin, தன்னுடன் பணியாற்றிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவருடன் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தார்.

கூர்மையான ஆணிகள் நிரப்பப்பட்ட ஒரு குண்டு அவரது உயிரைப் பறித்தது பிரேதப்பரிசோதனையில் தெரியவந்தது.

இந்நிலையில், புதனன்று, அமெரிக்க நீதிமன்றம் ஒன்று Marie Colvin கொல்லப்பட்டதற்காக 302 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்குமாறு சிரிய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்