சீறிவந்த தண்ணீர்... நடுவில் சிக்கிய மக்கள்: பதைபதைக்க வைக்கும் வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் 115 பேரை காவு வாங்கிய அணை உடைந்த சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ ஒன்று பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.

பிரேசிலின் புருமாடின்கோ நகரத்தில் பயன்பாட்டில் இல்லாத அணை ஒன்று கடந்த 25 ஆம் திகதி திடீரென உடைந்தது.

அப்போது அணையின் அருகே இருந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரும் சேறும் சிறிது நேரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமித்தது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரித்தது.

ஏராளமானோர் காணாமல் போயினர். அணைகளைச் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சேறு, சகதி அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளில் மீட்புப்பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தீயணைப்புத் துறையினர், பொலிசார் ஆகியோர் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிரேசில் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 248 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் சகதிகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இந்த அணை உடைந்த விபத்து தொடர்பாக வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சுரங்கத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. அணை உடைந்து வெளியேறும் தண்ணீர் சேறும் சக்தியுடனும் சுரங்கத்துக்குள் வரும் காட்சி பதிவாகியுள்ளது.

சம்பவத்தின்போது அங்குள்ள வாகனங்களில் பொதுமக்கள் பரபரப்புடன் வெளியேறும் காட்சிகளும்,

பலர் சீறிவந்த வெள்ளத்தில் சிக்குண்டு மாயமாவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

வெள்ளியன்று பல நூறு பேர் கூடி இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் இந்த சம்பவத்திற்கு காரணமான உயரதிகாரிகளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்