மூன்று நாட்கள் சாலையில் பயணிக்க இருக்கும் போயிங் விமானம்: காரணம் இதுதானாம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து போயிங் விமானம் ஒன்று சாலை மார்க்கமாக மூன்று நாட்கள் பயணிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆம்ஸ்டர்டாமின் Schiphol விமான நிலையத்திலிருந்து புறப்படும் 'City of Bangkok' என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட அந்த விமானம் 30 ஆண்டுகள் பறந்த பிறகு ஓய்வெடுக்க உள்ளது.

லொறி ஒன்று அந்த விமானத்தை பிப்ரவரி 5, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாட்கள் சாலை வழியாக இழுத்துக் கொண்டு வர உள்ளது.

Schiphol விமான நிலையத்திலிருந்து புறப்படும் அந்த விமானம் இறுதியாக The Corendon Village Hotel என்னும் ஹோட்டலுக்கு எதிரில் உள்ள புல் வெளியில் நிறுத்தப்படும்.

பின்னர் அது விருந்தினர்கள் தங்கும் அறைகள் கொண்ட ஹோட்டாக இந்த வருடத்தின் மத்தியில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்