கர்ப்பமானது தெரியாமலேயே இருந்த பெண்: தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த கருச்சிதைவு.. கண்ணீர் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிக் பிரதர் என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இளம்பெண்ணுக்கு நிகழ்ச்சியின் போதே கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பிரதர்.

இதில் ஐரீன் ரோசேல்ஸ் (27) என்ற இளம்பெண் தனது கணவர் கிகோ ரிவேரா (34) என்பவருடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் நேரலை நடந்து கொண்டிருக்கும் போதே ஐரீனுக்கு வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐரீனுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது தெரியவந்தது.

அதாவது, இரண்டு வார கர்ப்பமாக இருந்த ஐரீனுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

தான் கர்ப்பமாக இருப்பது கூட ஐரீனுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் கருச்சிதைவு ஏற்பட்டது அவரை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதன்பின்னர் குறித்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்ட ஐரீனும், கிகோவும் கண்கலங்கியது பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்