பிரபல பாடகி டீ ஷர்ட்டில் நாஜிப் படையின் ஸ்வஸ்திக் சின்னம்: வலுக்கும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நாஜிப்படையின் சின்னத்தை அணிந்து பாடல்கள் பாடிய இசைக்குழுவிற்கு இஸ்ரேல் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் பிரபல இசைக்குழு ''ஆல் கேர்ள் பேன்ட்'' தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த இசைநிகழ்ச்சியில் பிரபல பாடகி பிச்சையப்பா நாம்சாய் நாதா ஹிட்லரின் சின்னமான ஸ்வஸ்திக் பொறித்த டீ ஷர்ட்டை அணிந்து பாடல்களைப் பாடினார்.

இது பலரையும் வியப்பிலும் கோபத்திலும் ஆழ்த்தியது.

பாங்காக்கில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் துணைத் தூதர் ஸ்மாதர் ஷாப்பிரா தனது டுவிட்டர் பதிவில் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

''பொது இடங்களில் பலரும் பார்க்கும்விதமாக ஹிட்லர் படங்கள், ஸ்வஸ்திக் சின்னங்கள் மற்றும் நாஜிப்படையின் இதர முத்திரைகள் அச்சிடப்பட்ட டீஷர்ட்களை அணிந்துகொண்டு வலம்வருவது என்பது உலக வரலாற்றைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் சர்வதேச இனப்படுகொலை தினம் அனுசரிக்கப்படும்நிலையில் இச்செயல் மிகவும் வருத்தத்தையும் அச்சத்தையும் தருகிறது.

இந்த இசைக்குழுவின் பாடகி அணிந்திருந்த டீஷர்ட் நாஜி அடையாளங்கள் உலகெங்கிலும் நாஜி படைகளினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களான மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளைத் துன்புறுத்தியது என அவர் அதில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில் இசைநிகழ்ச்சியில் தொடக்கத்திலேயே தனது செயலுக்காக பாடகி மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் பாடகியின் ரசிகர்கள் மற்றும் இசைக்குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்