சிறுமிகளை வன்கொடுமையால் கொலை செய்த கொடூரர்கள்: தண்டனை விவரத்துடன் உடல்களாக மீட்பு

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பங்களாதேஷ் நாட்டில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை, கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் அவர்களின் கழுத்தில் தண்டனை விவரம் ஒன்றை குறிப்பிட்டு சென்றுள்ளனர்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சஜல் ஜோமதர் ( 28). கடந்த ஜனவரி 18ஆம் தேதி சிறுமி ஒருவரை தனது இரு நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான்.

இந்நிலையில் இது குறித்து சிறுமியின் தந்தை புகார் அளித்தும் அவன் கைது செய்யப்படாமல் இருந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து சஜல் கொலை செய்யப்பட்டு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த உடலில் கழுத்தில் பிளாஸ்டின் கயிறால் ஒரு துண்டு எழுதப்பட்டு கட்டப்பட்டிருந்தது.

அந்த துண்டில், ”நான் சஜல், நான்தான் (சிறுமியின் பெயர் குறிப்பிட்டு) பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி. என்னுடைய தண்டனை இதுதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உடலை கைப்பற்றிய பொலிசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

அவர்கள் கூறுகையில், காது பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சஜல் இறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அந்த சிறுமியின் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

ஆனால், இதற்கு முன்னரும் பங்களாதேஷ் நாட்டில் 14வயது சிறுமியை கொலை செய்த நபர் ஒருவரின் கழுத்தில் இதுபோன்ற தகவல் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த வழக்கிலும் இன்னும் குற்றவாளியை கண்டறியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்