பிலிப்பைன்சில் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல்! 27 பேர் பலி

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தேவாலயம் ஒன்றில் தீவிரவாதிகள் திருப்பலியின் போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் கொல்லபட்டுள்ளனர்.

தேவாலயத்தில் திருப்பலி நடக்கும் வேளையில் ஆலையத்தின் வெளிபுறத்தில் பயங்கர சத்தத்துடன் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்தனர். இந்த சத்தம் கேட்ட மக்கள் பயந்து போய் ஆலையத்திலிருந்து வெளியே ஓடினர்.

அந்நேரம் பார்த்து ஆலயவளாக நுழைவு வாயிலில் மீண்டும் ஒரு குண்டு வெடிக்க செய்தனர். இதில் 27பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். கிட்டத்தட்ட 80பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஆனால் கடந்த 5ஆண்டுகளாக சிறுபான்மையின இஸ்லாமியர்கள் 1,50,000 கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள், இந்த சம்பவம் நிகழ செய்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்