கர்ப்பிணியை கைவிட்ட கணவர்... பிறந்த குழந்தையை சுவற்றில் வீசி கொலை செய்த தாயார்: பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் பிறந்த பிஞ்சு குழந்தையை சுவற்றில் வீசி கொலை செய்த தாயார் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

எத்தியோப்பிய நாட்டவரான பெண் ஒருவரே தமக்கு பிறந்த பிஞ்சு குழந்தையை கழிவறையின் சுவற்றில் வீசி கொடூரமாக கொலை செய்தவர்.

கடந்த 2018 ஆம் அண்டு அக்டோபர் மாதம் இவர் பணியாற்றும் குடியிருப்பில் உள்ள கழிவறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

உடனையே அந்த குழந்தையை சுவற்றில் வீசி கொலை செய்து, துணியால் புதைத்து குப்பை கொட்டும் பகுதியில் வீசியுள்ளார்.

குப்பை அள்ளும் பணியாளர்கள் குழந்தையின் சடலத்தை கண்டுபிடித்து பொலிசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் தமது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தமக்கு பிறந்த குழந்தையை தனியாக வளர்க்க முடியாமல் போகும் என்பதாலையே கொலை செய்ததாகவும், கர்ப்பிணி என அறிந்தும் தம்மை கைவிட்டு சென்ற கணவர் மீதுள்ள ஆத்திரமே இந்த கொலையை செய்ய தூண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரை தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் கணவர் தாம் கர்ப்பமானது கூட தெரியாது என தெரிவித்ததாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

தமது கர்ப்பம் மீது அவர் சந்தேகம் எழுப்பியது தம்மை கடுமையாக பாதித்தது என கூறும் அந்த பெண், அன்றைய நாளே கருவை கலைத்தால் என்ன என பலமுறை சிந்தித்ததாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சம்பவத்தன்று அதிகாலை 4 மணியிருக்கும் அப்போது தமக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், உடனையே கழிவறியில் சென்று பிள்ளை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்தே சுவற்றில் வீசி கொலை செய்ததாகவும், இதனைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் மயக்க நிலையில் இருந்ததாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்