இளம்பெண்ணின் இதயத்தை தனியாக வெட்டி எடுத்த இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் இளம்பெண்ணை கொலை செய்து, இதயத்தை தனியாக வெளியில் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் காம்பினஸ் நகரில் அமைந்துள்ள ஒரு உள்ளூர் விடுதிக்கு கயோ சாண்டோஸ் டி ஒலிவேரா என்கிற 20 வயதான இளைஞர் சென்றுள்ளார்.

அங்கு விடுதியின் உரிமையாளரான 35 வயது ஜோஸ் டா சில்வா என்கிற பெண்ணை சந்தித்துள்ளான். அவரை அடித்து கொலை செய்த இளைஞர், 65 டொலர்களையும, சில உடமைகளையும் திருடியுள்ளான்.

பின்னர் உடைந்த ஒரு கண்ணாடி துண்டை வைத்து, ஜோஸ் டாவின் நெஞ்சு பகுதியில் குத்தி, இதயத்தை வெளியில் எடுத்துள்ளார்.

அதனை ஒரு துணியில் சுற்றி தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்றதுடன், உடலை அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளான்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், ஒலிவேராவிடம் விசாரணை நடத்திய போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

பின்னர் அவனுடைய வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அலமாரியில் துணியில் சுற்றியபடி மறைத்து வைக்கப்பட்டிருந்த இதயத்தை கண்டறிந்தனர்.

இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட சில்வாவின் உடல்பகுதியில் கீறல்களும், காயங்களும் இருந்ததால் இளைஞரை எதிர்த்து போராடி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இறந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் இருந்ததாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers