வயதான நபரை பாலியல் அடிமையாக வைத்திருந்த பெண்: மர்ம உறுப்பை துண்டுகளாக நறுக்கி கொலை செய்த கொடூரம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

செர்பியா நாட்டில் 67 வயதான நபரை பாலியல் அடிமையாக வைத்திருந்த பெண், கோடரியை வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செர்பியா நாட்டின் Guncati பகுதியை சேர்ந்தவர் 34 வயதான மரினா பிக்கனோவிக். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பீட்டர் பெட்ரோவிக் என்கிற நபரை பாலியல் அடிமையாக வைத்திருந்துள்ளார்.

ஜனவரி 10ம் தேதியன்று பீட்டரின் கைகளை கட்டிப்போட்டு, உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைபடுத்தியுள்ளார்.

பின்னர் அவருடைய மர்ம உறுப்பை துண்டுகளாக நறுக்கி, ஸ்டவ் அடுப்பில் வைத்துள்ளார். கோடாரியை கொண்டு அவரை கொடூரமாக கொலை செய்த மரினா, "அவருடன் முடிந்தது" என குறிப்பிட்டு பீட்டரின் குடும்பத்தாருக்கு மெசேஜ் செய்துள்ளார்.

இதற்கிடையில் மரினாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்