பாலியல் வன்கொடுமைக்கு ஆடைகள்தான் காரணமா?

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பாலியல் வன்கொடுமையில் சிக்கி கொண்டவர்களின் துயரை மற்றவர்களுக்கு புரிய வைக்க அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அமைத்து கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளனர் பெல்ஜியத்தை சேர்ந்த குழுவினர்

பாலியல் பலாத்காரத்தில் சிக்கி கொண்டவர்கள் பரவலாக என்ன ஆடை அணிந்திருந்தனர் என்ற கேள்வி பெரும்பாலும் கேட்கப்படுகின்றது. அதிலும் பெண்கள் ஆடை மற்றவர்கள் விரும்பாத வண்ணம் இருந்தால் ஆடைதான் காரணம் என்று குற்றச்சாட்டு வைத்துவிடுவார்கள்

இந்த மாதிரியான விமர்சனங்கள் அவர்களுக்கு எவ்வளவு கொடுமையான வலி கொடுக்கும் என பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே உணர முடியும், இந்த உணர்வை மற்றவர்களும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கில், பெல்ஜியத்தின் புருசெல் நாகரில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'What Were You Wearing?' என்னும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், பாலியல் பலாத்காரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த ஆடைகள் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலும் பைஜாமாக்கள், டிராக்ஷூட்ஸ் மற்றும் ஒரு குழந்தையின் என் லிட்டில் போனி ஷர்ட் போன்ற ஆடைகள்தான் இடம் பெற்றுள்ளன.

இந்த காண்காட்சியின் முக்கிய நோக்கமாக, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையினை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதும்.

மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆடை ஒரு தூண்டுதல் அல்ல என்பதை உணர்த்தவும், ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளது. மேலும் இது நிச்சயமாக பாலியல் சீண்டலுக்கு அவதிபட்டவர்களின் நிலைகுறித்து உணரவைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...