இரண்டு அழகான குழந்தைகளை கொன்று எரித்த இளம்பெண்: புரியாத மர்மம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தன் அழகான இரண்டு குழந்தைகளை கொன்று எரித்த இளம்பெண், அவர்கள் மீது அன்புடையவர் என அக்கம்பக்கத்தவர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் ஏன் அவர்களை கொலை செய்தார் என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த எலனா கரிமோவா (27) விவாகரத்தானவர். அவருக்கு கதீஷா (4) மற்றும் சுலைமான் (2) ஆகிய இரண்டு குழந்தைகள். தற்போது அந்த அழகிய இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் எலனா.

Nizhny Novgorod நகரிலுள்ள குடோன் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்ததையடுத்து, தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர்.

தீ அணைந்த பின், வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது ஒரு உடல் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அது ஒரு நாயின் உடலாக இருக்கலாம் என்று எண்ணியிருக்கின்றனர்.

பின்னர் அருகில் சென்று பார்க்கும்போது அது ஒரு உடல் அல்ல, இரண்டு குழந்தைகளின் உடல்கள் என்பதும் அவை ஒரு சூட்கேசுக்குள் மடக்கி வைக்கபட்டிருந்ததால் அவ்வாறு காட்சியளிப்பதையும் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

பொலிசார் விசாரணையைத் தொடங்கி அருகிலுள்ள CCTV கெமராக்களை ஆய்வு செய்யும்போது, ஒரு கார் அந்தப்பக்கம் வந்தது தெரிந்ததும், அது யாருடையது என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

அப்போதுதான் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கார் எலனா கரிமோவா என்ற பெண்ணால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து கெமராக்களை ஆய்வு செய்தபோது எலனா, ஒரு சூப்பர் மார்க்கெட் சென்று சாக்லேட் வாங்குவது, காரில் பெட்ரோல் நிரப்புவது, பெட்ரோல் வாங்குவது என பல காட்சிகள் பதிவாகியிருந்தன.

எலனாவை விசாரித்த போது, அவர் தன் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து, பின் அவர்களை கழுத்தை நெறித்துக் கொன்று, பின் பெட்ரோல் ஊற்றி எரித்ததும், அதிக புகை வந்ததால், அக்கம்பக்கத்தாருக்கு தெரிந்து விடும் என பயந்து பாதி எரிந்த உடல்களை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து ஒரு குடோனுக்கு கொண்டு சென்று போட்டுவிட்டு, குடோனையே பெட்ரோல் ஊற்றி எரித்ததையும் ஒப்புக் கொண்டார்.

விவாகரத்து ஆனதால், பணப்பிரச்சினை ஏற்பட்டதாகவும், பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்பட்டதாலேயே அவர்களை கொலை செய்ததாகவும் எலனா வாக்குமூலம் அளிக்க,

அக்கம்பக்கத்தவர்களோ அவருக்கு பணக்கஷ்டம் எல்லாம் இல்லை என்றும், அவர் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கெல்லாம் சுற்றுலா சென்று வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

அதனால் எதற்காக எலனா கொலை செய்தார் என்ற மர்மம் விலகாத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்