நான் ஒரு பாலியல் தொழிலாளி! தொகுப்பாளர் கைது

Report Print Abisha in ஏனைய நாடுகள்

கடந்த ஆண்டில் எகிப்த்ய தொலைக்காட்சி ஒன்று ஒரு பாலுறவு கொள்ளும் நபர் ஒருவரை நேர்காணல் செய்ததற்காக தொகுப்பாளருக்கு சிறை தண்டனையும் கடும் பணிகளையும் நீதிமன்றம் வழங்கி உள்ளது.

எகிப்தில் ஒரு பாலினை சேர்க்கையாளர்கள் சட்டபடி தடுக்க எந்த அதிகாரமும் அந்நாட்டு அரசால் வழங்கப்படவில்லை.

ஆனால் அதிகாரிகள் எஸ்.ஜி.பி.டி (ஒரு பாலினசேர்க்கை ஆதரவு அமைப்பு) மீது தொடர்ந்து பால்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு எகிப்த்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒருபாலின சேர்க்கைக்கு ஆதரவு அளிப்பதுபோல், ஒரு பாலியல் தொழில் செய்பவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அந்த நபரின் முகம் பாதுகாப்பு கருத்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவில்லை.

இந்நிலையில் இந்த நேர்காணலை நடத்திய முஹமத் அல்-கெயிட்டி ஒரின சேர்க்கைக்கு ஆதரவாக பேசியதாகவும், நேர்கணலில் பேசிய நபர் தன்னை பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டதாகவும் பதிவு செய்து தொகுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பில் முஹமத் அல்-கெயிட்டிக்கு ஓராண்டு சிறையும், கடும் பணிகளும் வழங்கும்படி, 3,000 எகிப்திய பவுண்டுகள் அபராதமும், விதித்துள்ளது. மேலும் அவர் ஒராண்டுக்கு பின் விடுதலை செய்யப்பட்டாலும் கண்காணிப்பிலேயே இருப்பார் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்