இரு பாலுறுப்புகளுடன் பிறந்த குழந்தை – இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா

Report Print Abisha in ஏனைய நாடுகள்

கென்யா நாட்டை சேர்ந்த ஜான் என்ற14 வயது சிறுவன் இருபாலுறுப்புகளுடன் பிறந்து அவன் பெண்ணாக மாற்றப்பட்டு தற்போது ஆணாக மாறி உள்ளான்.

உலக முழுவதிலும் இருபாலின பண்புகூறுகளுடன் 1.7சதவிகதம் குழந்தைகள் பிறக்கின்றன என்று ஐ.நா கூறுகிறது. கென்யா போன்ற நாடுகளில் இரு பாலுறுப்பு கொண்ட குழந்தைகள் இன்னமும் கொல்லப்படுகின்றனர். ஆனால் இவர்களுக்கு வழிகாட்ட அதிகாரிகள் சிறப்பு குழு அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கென்யாவை சேர்ந்த ஜான் என்ற இருபாலுறுப்புகளுடன் பிறந்த சிறுவனின் நிலை குறித்து அவன் தாயார் விளக்கி உள்ளார்.

ஜானுக்கு தற்போது 14 வயது ஆகின்றது. அவன் பிறந்த போது அவனது பாலுறுப்பு வித்தியாசமாக இருப்பதை பார்த்து பந்து போனேன்.

அவனை காட்டி மருத்துவரிடம் கேட்டேன். மருத்துவர் ஜான்க்கு இரு பாலுறுப்புகள் இருப்பதாக கூறினார். இது குறித்து என்ன செய்வது என்று கேட்ட போது அவனுக்கு அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர் ஆலோசனை செய்தனர்.

ஆனால் ஜானின் தாயாருக்கு அதை சுற்றத்தாருக்கு புரியவைக்க கடினமாக இருந்துள்ளது. யாரும் அதை முதலில் ஏற்று கொள்ளவில்லை அவர்களை ஒப்பு கொள்ள செய்தபின்னர் ஆணுறுப்பு நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜான் வளர்ந்தபின் தன்னை ஒரு பெண்ணாக உணராமல் இருந்துள்ளான் எனவே மனம் உடைந்து பலமுறை தற்கொலை செய்து கொள்ள முற்பட்டுள்ளான்.

இதை அடுத்து தற்போது தன்னை ஆணாக மாற்றி கொண்டு தனக்கான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றார்.

குறிப்பாக இரு பாலுறுப்புகளுடன் பிறக்கும் குழந்தைகள் சிறுநீர்கழிப்பதில் அதிகம் சிரமபடுகின்றனர். மேலும் அவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமத்திரேகைக்கு கீழே உள்ள நாடுகளில் மட்டும் இதுபோன்ற இருபாலின குழந்தைகள் பிறக்கின்றனர் என்ற சொல்ல முடியவதில்லை. அமெரிக்காவிலும் இதுபோன்ற குறைபாடுகளுடன் குழந்தைகள் உள்ளனர். அதற்கு எடுத்துகாட்டு அங்கு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ரோஸி என்ற குழந்தை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...