ஒருபாலுறவு நபரை நேர்காணல் செய்த தொகுப்பாளருக்கு சிறை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

எகிப்தில் ஒருபாலுறவு நபரை நேர்காணல் செய்த தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,

எல்டிசி தொலைக்காட்சி சேனலில் ஓரினச்சேர்க்கைகளை ஊக்குவித்ததாக குற்றம்சாட்டி தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு 3,000 எகிப்திய பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.

எகிப்தில் ஒருபாலுறவு குற்றச்செயலாக வெளிப்படையாகக் கருதப்படவில்லை. ஆனாலும், எல்ஜிபிடி சமூகத்தினர் மீது அதிகாரிகள் எடுத்து வரும் எதிர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.

பல சந்தர்ப்பங்களில் ஒருபாலுறவுக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்திய இந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் தொழிலாளி போல அமைந்துவிட்ட தனது வாழ்க்கை குறித்து பேசிய நபரிடம் நேர்காணல் செய்தார்.

தனது வருத்தங்களை, வாழ்க்கை நிலையை விரிவாக விவரித்த நபரின் முகம் நேர்காணலில் மறைக்கப்பட்டிருந்தது.

எகிப்தின் உயர் ஊடக அமைப்பான ஊடக ஒழுங்குமுறை உயர் கவுன்சில் உடனடியாக இரண்டு வாரங்களுக்கு இந்த தொலைக்காட்சி சேனலை ஒளிப்பரப்பப்படுவதை தடை செய்தது.

சிறை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனை விதிக்கப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர், அவரது தண்டனை காலத்துக்கு பிறகு ஓராண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers