வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த காதலி! விமானநிலையத்தில் காதலன் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த தம்பி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில் படித்து வந்த பெண் தமிழகத்திற்கு வந்த போது, அவரது காதலன் அவரை அழைத்துச் செல்ல முற்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஷார்ஜாவில் நான்காம் ஆண்டு மருத்துவபடிப்பு படித்து வருகிறார். இவருடன் இவரது தம்பியும் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் விடுறை அளிக்கப்பட்டதால், இரண்டு பேரும் மதுரை செல்வதற்காக ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னைக்கு வந்துள்ளனர்.

அதன் பின் சென்னை வந்த அவர்கள் மதுரைக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த போது, திடீரென்று வந்த சக்தி என்ற இளைஞன் குறித்த பெண்ணை அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

அப்போது உடன் இருந்த தம்பியை இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க முற்பட பிரச்சனை ஏற்பட்டது. அதன் பின் விமானநிலையத்தில் இருந்த விமான அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த இளைஞன், அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது, இருவரும் காதலிப்பதாகவும், நான் தான் அவரை விமானநிலையத்திற்கு வரச் சொன்னதாக கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், உடனடியாக சென்னை வந்த பெற்றோர், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற் கொண்ட சமரச முயற்சி பலன் அளிக்க வில்லை. இதையடுத்து விமான நிலையத்திற்கு வெளியே போய் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுமாறு அவர்களை அதிகாரிகள் வெளியேற்றினர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்