113 வயதில் காலமான உலகின் மூத்த மனிதர்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ஜப்பான் நாட்டை சேர்ந்த உலகின் மூத்த மனிதர் என்ற கின்னஸ் சாதனை படித்த மசாசோ நோனாகா காலமானார்

1905- ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் பிறந்தவர் மசாசோ நோனாகா. இவர் தற்போது வரை நான்கு தலைமுறைகளை பார்த்துள்ளார். இவர் கடந்த ஆண்டு அவரது 112 ஆம் வயதில் உலகின் மூத்த மனிதர் என்ற கின்னஸ் சாதனை பெற்றுள்ளார். மசாசோ நோனாகா-விற்கு 6 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

இவர் கடந்த ஆண்டிலிருந்து சக்கர நாற்காலி பயன்படுத்த துவங்கி உள்ளார். ஆனால் அவரே சொந்தமாக இயக்குவது அனைவரிடமும் சிரித்து பேசுவது என்று தனது சொந்த வேலைகள் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.

இது குறித்து அவரது பேரபிள்ளைகள் கூறும்போது அவர் தனது வேலையை தானே செய்து கொள்ள வலிமையுடன் இருந்தார். அவரது 106 வயது வரை குடும்பத்தை நிர்வகித்தது அவர்தான் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் உறக்கத்திலேயே நிம்மத்தியாக இறந்துவிட்டார் என்றும், எங்கள் குடும்பத்தில் பெருவிரல் முறிந்ததுபோல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers