சிங்கப்பூர் தம்பதியினரின் மோசமான செயல்: பணிப்பெண்ணை கழுவியநீரை குடிக்க வைத்த கொடுமை

Report Print Abisha in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் வேலைக்கு சென்ற மீயான்மரை சேர்ந்த பெண்ணை தம்பதியினர் இருவரும் கடுமையான சித்திரவதை செய்துள்ளது உறுதியானதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வீட்டில் வேலை செய்ய மீயான்மர் பிலிபெயின்ஸ் போன்ற நாடுகளிலிருந்து அதிகம்பேர் வருகின்றனர். இந்நிலையில் ஒரு தம்பதியினர் தங்களின் வேலைக்காக பியு என்ற மியான்மர் பெண்ணை பணிக்கு அமர்த்தினர். அவர் எவ்வளவு பணிகள் செய்தாலும் எஐமானிக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் அவரை தலை முடியை பிடித்து கதவுகளில் இடிப்பது, வீட்டிடை கழுவிய நீரை குடிக்க வைப்பது என்று கொடூரமான தண்டனைகள் வழங்கி உள்ளனர். தொடர்ந்து உடல் காயம்படும் அளவிற்கு நடந்து கொண்டுள்ளனர். மேலும் தலையை சுவரில் இடிக்க செய்வது போன்ற, மிக கொடிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பெண் ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பி பணிபெண்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்து வந்த அதிகாரிகள் அந்த தம்பதிகள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers